Power Shutdown in Chennai: சென்னையில் மின்தடை.. இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க.!
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தாம்பரம்:
கடப்பேரி எம்ஐடி, ராதா நகர், நேரு நகர், பழைய அஸ்தினாபுரம் சாலை, பட்டேல் தெரு, ராஜாஜி தெரு, ஆனந்த நிலையம், ஆர்.பி.ரோடு, நல்லப்பா தெரு, அகநானூறு தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
IT காரிடார்:
தரமணி கேபிகே நகர், நேரு நகர் அனைத்து இணைப்பு சாலை, ரமணியாம் அடுக்குமாடி குடியிருப்பு.
பெரம்பூர்:
சிட்கோ நகர் மோகன் ரெட்டி மருத்துவமனை, எம்பார் நாயுடு தெரு, எம்டிஎச் சாலை (பகுதி) புழல் விநாயகபுரம் முழுவதும், காஞ்சி நகர், ரெட்ஹில்ஸ் ஹை ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- power cut in chennai
- power cut today chennai
- power shutdown areas in chennai
- power shutdown in chennai
- power shutdown today
- shutdown in chennai today
- today power shutdown areas
- today power shutdown areas chennai
- today power shutdown areas in chennai
- today power shutdown chennai
- today power shutdown in chennai
- today power cut in chennai