தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், காலடிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

தாம்பரம்:

பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோடு, ராஜேஷ் நகர், துலுக்காநாத்தம்மன் கோயில் தெரு, மணிமேகலை தெரு, ராஜலட்சுமி நகர், கிருஷ்ணா நகர், சாய் பாலாஜி நகர், சிவாஸ் அவென்யூ, ராஜசேகரன் நகர், வெங்கடேஸ்வரா நகர்.

காலடிப்பேட்டை:

திருச்சின்னக்குப்பம் மெயின் ரோடு, ராஜாக்கடை, அப்பர்சாமி கோயில் தெரு, மேற்கு மாட தெரு, வடக்கு மாட தெரு, சந்நிதி தெரு, மாட்டு மாந்தை, கன்னி கோயில், டி.எச் ரோடு, சாத்தங்காடு மெயின் ரோடு, புது தெரு, வசந்தா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.