தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பூந்தமல்லி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பூந்தமல்லி:

திருமழிசை பீடர்.

பெரம்பூர்:

தொண்டியார்பேட்டை நெடுஞ்சாலை, ஆசிரியர் காலனி 2 முதல் 6வது தெரு, கிருஷ்ணன் தெரு.

கோவிலம்பாக்கம்:

துரைப்பாக்கம் சாலை, மேடவாக்கம் மெயின் ரோடு, திருவின் நகர், பூபதி நகர்.

மணலி:

கலைஞர் நகர், சி.பி.சி.எல். நகர், 200 அடி சாலை, பர்மா நகர், பொன்னேரி நெடுஞ்சாலை,எம்.எம்.டி.எ பேஸ் 1 &2, சாத்தங்காடு ஸ்டீல்யார்டு, கார்கில் நகர், சத்தியமூர்த்தி நகர், சொக்கம்மாள்புரம், எ.சி.சி. மெயின் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.