Power Shutdown in Chennai: வேலை இருந்தா சீக்கிரமா முடிச்சுருங்க! சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் மின்தடை.!
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவான்மியூர், அம்பத்தூர், ராயபுரம் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கொட்டிவாக்கம் & திருவான்மியூர் பகுதி:
ஜர்னலிஸ்ட் காலனி, சீனிவாசபுரம், திருவள்ளுவர் நகர், கொட்டிவாக்கம் குப்பம், ஈசிஆர் மெயின் ரோடு, பாலகிருஷ்ணா ஹை ரோடு, போலீஸ் குவார்ட்டர்ஸ், திருவீதியம்மன்கோவில் தெரு, கிழக்கு, தெற்கு & வடக்கு மாட தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அம்பத்தூர் பகுதி:
சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு பகுதி, குளக்கரை தெரு, பஜனை கோயில் தெரு, ரயில் நிலைய சாலை, கச்சின குப்பம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ராயபுரம் பகுதி:
எம்.சி.ரோடு, சிமெண்டரி ரோடு, எம்.எஸ்.கோயில் தெரு, மசூதி தெரு, ஆண்டியப்ப முதலி தெரு, கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாதா தெரு, தாண்டவமூர்த்தி தெரு, என்ஆர்டி ரோடு, வேலாயுதபாண்டியன் தெரு, பஜனை கோயில் தெரு, நல்லப்பா வாத்தியார் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.