தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஐடி காரிடார், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

ஐடி காரிடார்: 

தரமணி கொட்டிவாக்கம் சத்யா 1வது முதல் 5வது தெருக்கள், நேரு நகர் 2வது இணைப்பு தெரு உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

அம்பத்தூர்: 

பாடி பாலாஜி நகர், டிவிஎஸ் நகர், அக்ரஹாரம், ஹவுசிங் போர்டு பகுதி, டி.வி.எஸ்.காலனி, தத்தனங்குப்பம், எம்.டி.எச்.ரோடு, பார்க் ரோடு, படவீட்டம்மன் கோயில் பகுதி, டீச்சர்ஸ் காலனி, புத்தகரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.