சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை இயங்குவது குறித்து சிஎம்டிஏ சார்பில் நேற்று முன்தினம் ஆலோசனை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல இடங்களில் உள்ள காய்கறிகள் மூடப்பட்டாலும் கோயம்பேடு சந்தை மூடப்படாமல் இருந்து வந்தது. குறிப்பாக நாள் ஒன்று 50,000க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள், மக்கள் என வந்து செல்லும் இடமாக இருந்து வந்தது. இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் முதலில் 2 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து, கோயம்பேடு சந்தையை 3ஆக பிரிக்க தொடர்பாக ஒரு ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , காவல் துறை ஆணையர் விஸ்வநாதன், சிஎம்டிஏ முக்கிய அதிகாரிகள் மற்றும் கோயம்பேடு சந்தை பிரதநிதிகளும் இதில் கலந்து கொண்டனர். 

இதனையடுத்து, சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. பழம் மற்றும் பூ சந்தையை மாதவரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால், கோயம்பேடு சந்தைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில், கோயம்பேடு மார்கெட்டை மையாக வைத்து கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.  இதில், கோயம்பேட்டில் வியாபாரம் செய்த ஊழியர், பணியில் இருந்த காவலர்கள் உள்ளிட்ட 81 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. மேலும், 400க்கும் மேற்பட்டவர்களிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுபோல ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை இயங்குவது குறித்து சிஎம்டிஏ சார்பில் நேற்று முன்தினம் ஆலோசனை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , காவல் துறை ஆணையர் உள்ளிட்ட உயர அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து, அதில் கலந்து கொண்டவர்களையும் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.