ஆன்லைனில் ரம்பம்.. மனைவி, பிள்ளைகளை கழுத்தை அறுத்து கொன்றது ஏன்? வெளியான அதிர்ச்சி தகவல்..!
மனைவி, பிள்ளைகளை கொன்றுவிட்டு ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடன் தொல்லையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த ஐ.டி. ஊழியர் ஆன்லைனில் மரம் அறுக்கும் ரம்பத்தை வாங்கி கொலை செய்துள்ளார்.
ஆன்லைனில் மரம் அறுக்கும் ரம்பத்தை வாங்கி ஐ.டி. ஊழியர் தனது மனைவி, பிள்ளைகளை கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஷ்வரா நகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (41). இவர் தனியார் ஐடி நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (39). இவர்களது மகள் நித்யஸ்ரீ (13), மகன் அரிகிருஷ்ணன் (9) ஆகியோரை மரம் அறுக்கும் ரம்பத்தால் கொடூரமாக துடிதுடிக்க கொலை செய்துள்ளார். இதனையடுத்து,பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் கொலைக்கான காரணங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இதனிடையே, அவர்கள் வீட்டுனுள் சோதனை நடைபெற்றது. அப்போது இறப்பிற்கு முன் பிரகாஷ் எழுதிய வைத்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் தங்களின் இந்த முடிவு, குடும்பத்தோடு சேர்ந்து எடுத்த முடிவு என குறிப்பிட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பொழிச்சலூர் கொலை சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- மனைவி, பிள்ளைகளை கொன்றுவிட்டு ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடன் தொல்லையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த ஐ.டி. ஊழியர் ஆன்லைனில் மரம் அறுக்கும் ரம்பத்தை வாங்கி கொலை செய்துள்ளார். அவரது பிள்ளைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்ப