சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீமதி/30 (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மருத்துராக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கும் மறைமலை நகர் பகுதியை சேர்ந்த பாலமுரளிதரன் இருவருக்கு திருமணத்திற்கு இரு வீட்டார் சம்மதத்துடன் பேசி முடிக்கப்பட்டது. இதில் பாலமுரளிதரன் வருமான வரிதுறையில் உதவி ஆணையராக பணியாற்றி வருவதாகவும்,  அவரது தந்தை பாலசுப்பமணி ஓய்வு பெற்ற டிஸ்பி என்றும் கூறப்படுகிறது. அடுத்தமாதம் இறுதியில் திருமண நாள் முடிவு செய்யப்பட்டு அழைப்பிதழ் அச்சடித்து பெண் வீட்டார் சார்பாக அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்த நிலையில். 

திருமணத்திற்கு முன்பே 50 இலட்சம் பணத்தையும், 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்ரீமதியின் பெற்றோருக்கு சொந்தமான இரண்டு  வீட்டையும் தனது பெயருக்கு மாற்றி தரவேண்டும் என்றும் , இல்லை என்றால் திருமணத்தை நிருத்தி விடுவதாக கூறி மிரட்டியதாக தெரிகிறது, அடுத்தமாதம் இறுதியில் திருமண நாள் முடிவு செய்யப்பட்டு அழைப்பிதழ் அச்சடித்து பெண் வீட்டார் சார்பாக அனைவருக்கும் வழங்கப்பட்டுவரும் நிலையில் முரளிதரன் இவ்வாறு மிரட்டியதால், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரூ.10 இலட்சம் ரூபாய் பணத்தை பெண் வீட்டார் சார்பில் முரளிதரனுக்கு வழங்கியதுடன், அவருக்கு கார் உள்ளிட்ட  இதர செலவுகளையும் செய்துள்ளதாக பெண்வீட்டார் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

 

ஆனாலும் தொடர்ந்து பால முரளிதரன் மிரட்டியதால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர் ஸ்ரீமதியின்  பெற்றோர் அவரது வீட்டின் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில்  இதே போல் முரளிதரன்  பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்ததுள்ளது, இது தொடர்பாக அவரது பெற்றோரிடம் கேட்டபொழுது தான் ஒரு ஓய்வு பெற்ற டிஎஸ்பி என்றும் தனது மகன் வருமானவரித்துறை உதவி ஆணையர் அதனால் தங்களால் ஓன்றம் செய்யமுடியாது என அதிகார தொனியில் மிரட்டல் விடுத்ததாக  இதனையடுத்தி அடுத்து முரளிதரன் மற்றும் அவரது பெற்றோர் மீது ஸ்ரீமதி குடும்பத்தினர் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர் இது குறித்து போலீசார் வாழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.