என்னை மன்னித்து விடுங்கள்.. வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை..!
மேற்கு வங்கத்தை சேர்ந்த சச்சின் குமார் ஜெயின் (31). சென்னை ஐஐடியில் பிஎச்டி படித்து வருகிறார். இவர் நண்பர்களுடன் வேளச்சேரி பிராமின் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்தனர்.
வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த சச்சின் குமார் ஜெயின் (31). சென்னை ஐஐடியில் பிஎச்டி படித்து வருகிறார். இவர் நண்பர்களுடன் வேளச்சேரி பிராமின் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்தனர். இந்நிலையில், வழக்கம் போல நேற்று காலை சச்சின் குமார் நண்பர்களுடன் கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால், திடீரென வகுப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறி வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
இதையும் படிங்க;- தமிழகம் முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.. சென்னையில் எந்தெந்த இடங்கள் தெரியுமா?
இதனையடுத்து, கல்லூரி முடிந்த பிறகு நண்பர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது சச்சின் குமார் ஜெயின் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுதொடர்பாக வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- ஜெயலலிதா ஆட்சியில் இப்படி நடந்து இருக்குமா.. திமுக ஆட்சியை பார்த்து சசிகலா இப்படி சொல்லிட்டாங்களே..!
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்தவற்கு முன்னதாக என்னை மன்னித்து விடுங்கள், நான் நலமாக இல்லை என ஆங்கிலத்தில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.