சென்னையின் இன்று காலை முதலே கிரீன்வேஸ் சாலை, அண்ணாசாலை, ஈக்காட்டுதாங்கல் வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இருள் சூழ்ந்து காணப்படுவதால் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 

சென்னையில் வடபழனி, அண்ணாசாலை, கிரீன்வேஸ் சாலை, ஈக்காட்டுத்தாங்கல், நந்தனம், அசோக் நகர், திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டு, ராயபுரம், கொளத்தூர்,  வேளச்சேரி, கீழ்ப்பாக்கம், பெரம்பூர், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மேலும், மேற்கு மாம்பலம், சூளைமேடு, முகப்பேர், எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், அடையாறு, ஆழ்வார்பேட்டை, நீலாங்கரை பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.