புயலுக்கு பின்னும் திரும்பாத அமைதி... வெள்ளத்தில் சிக்கிய சென்னையின் Exclusive கள நிலவரத்துடன் ஏசியாநெட் தமிழ்
சென்னையில் வெள்ளத்தால் சிக்கிய பகுதிகளில் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து சென்னைவாசிகள் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த Exclusive பேட்டியை பார்க்கலாம்.
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த திங்கட்கிழமை கனமழை வெளுத்து வாங்கியது. ஒரே நாள் இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையே வெள்ளக்காடானது. பல பகுதிகளில் வெள்ள நீர் சூழந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து மாநகராட்சி சார்பில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, தண்ணீர் தேங்கிய பகுதிகளில் நீரை அகற்றும் பணிகளும் மும்முரமாக நடைபெற்றன.
வெள்ளம் வந்த நான்கு நாட்கள் ஆகியும் இன்னும் வெள்ளநீர் வடியாமல் பல்வேறு பகுதி மக்கள் திண்டாடிவருகின்றனர். இந்த நிலையில், ஏசியாநெட் தமிழ் சார்பில் இன்று சென்னை எம்.எம்.டி.ஏ நகரில் வசிக்கும் மக்களிடம் வெள்ள நிலவரம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர் இந்த வெள்ளத்தால் தங்கள் வாழ்வாதாரமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கலங்கினர்.
வெள்ள நீர் வடிந்துவிட்டாலும் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் அதன்மூலம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு, மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் இருப்பதாக புலம்பி உள்ளனர். அதோடு நிவாரணமும் தங்களுக்கு பெரிதாக வழங்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
இனி இதுபோன்று நடக்காமல் இருக்க அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும் இதனால் குடிக்கு தண்ணீர் இன்றி தாங்கள் கஷ்டப்பட்டதாக எம்.எம்.டி.ஏ நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்த பேட்டி இதோ...