தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து சென்னையில் இருந்த ஜெர்மன் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட159 பேர் ஏர் இந்தியாவின் தனி விமானம் மூலம் பிராங்க்பேர் புறப்பட்டு சென்றனர்.

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இதை கட்டுப்படுத்த மத்திய அரசு  21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், மாநில அரசுகளும் பொதுமக்கள் யாரும் வெளியில் செல்லக்கூடாது என எச்சரித்தது. இதனால், கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி போனது.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்  கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அச்சம் அடைந்த சென்னையில் இருந்த  ஜெர்மன் தூதரக அதிகாரிகள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பினர். இது தொடர்பாக இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற இந்திய வெளியுறவுத்துறை அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

இதற்காக ஏர் இந்தியாவின் தனி விமானம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். இதற்கிடையில், தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் உட்பட 159 பேர், மருத்துவ பரிசோதனை செய்யப்ப்டடனர். அதன்பிறகு அவர்கள்   தனி விமானத்தில் ஏற்றப்பட்டு, பிராங்க்பேர்ட்  நகருக்கு  புறப்பட்டு  சென்றனர்.