தமிழகத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 8,002 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 4371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 2,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சென்னையில உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம், திரு.வி.க. நகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக  உள்ளது. 

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 742 ஆக உயர்ந்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழகத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 8,002 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 4371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 2,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சென்னையில உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம், திரு.வி.க. நகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. 

இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 742 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திரு.வி.க.நகரில் 590 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 713 பேருக்கும், அண்ணாநகரில் 349 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 327 பேரும், தேனாம்பேட்டையில் 458 பேரும், திருவொற்றியூரில் 98 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 379 பேருக்கும், பெருங்குடியில் 51 பேருக்கும், அடையாறில் 212 பேருக்கும், அம்பத்தூரில் 224 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 46 பேருக்கும், மாதவரத்தில் 65 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 52 பேருக்கும், மணலியில் 50 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.