சென்னை அரும்பாக்கம் சிக்னல் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

சென்னை அரும்பாக்கம் சிக்னல் அருகே மாநகராட்சி பேருந்து சென்றிக்கொண்டிருந்த போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது, கையில் பட்டா கத்தியுடன் இருந்த ஒரு மாணவர் மற்றொரு மாணவரான வசந்த் என்பவரை ரோட்டில் விரட்டி விரட்டி வெட்டினார். மேலும், பேருந்திற்குள் இருந்த வெளியே இழுத்து மற்ற மாணவர்களையும் வெட்டினர். இதில், 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால், பேருந்துக்குள் இருந்த பயணிகள் அலறினர். 

இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மாணவர்களை அங்கு பதிவான சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையில் பட்டப்பகலில் மாணவர்கள் இடையிலான மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. ரூட் பிரச்னையால் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.