அட கடவுளே.. கர்ப்பம் கலைந்ததால் கல்லூரி மாணவி செய்த வேலையை நீங்களே பாருங்க..!
சில மாதங்களுக்கு முன்பு லிங்கேஸ்வரி கர்ப்பமானார். ஆனால், சில நாட்களில் கர்ப்பம் கலைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த லிங்கேஸ்வரி நேற்று இரவு வீட்டில் தனது படுக்கை அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னையில் கல்லூரி மாணவியின் கர்ப்பம் கலைந்ததால் விரக்தி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நெற்குன்றம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் கண்ணன்(23). இவர் அதே பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரி (21) என்ற பெண்ணை காதலித்து கடந்த ஓராண்டு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் அண்ணா சதுக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் லிங்கேஸ்வரி பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு லிங்கேஸ்வரி கர்ப்பமானார். ஆனால், சில நாட்களில் கர்ப்பம் கலைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த லிங்கேஸ்வரி நேற்று இரவு வீட்டில் தனது படுக்கை அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து, நீண்ட நேரமாகியும் மனைவி வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த கணவர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதார். இதுதொடர்பாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்ததிற்கு விரைந்த போலீசார் லிங்கேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு நடத்தப்படுகிறது.