தேர்தலுக்கு முன்பே விறுவிறுப்பாக மாறிய எம்.ஜி.ஆர் ரயில் நிலையம்... அதிமுக- பாஜகவுக்கு பலன் கொடுக்குமா?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எம்.ஜி.ஆர் ரயில் நிலையமாக பெயர் பலகை வைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஒவ்வொரு நடைமேடைகளின் முன்பகுதியிலும் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்னும் பெயர் அடங்கிய சிறிய அளவிலான ஸ்டிக்கர் பொருத்தும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும் என்று அதிமுக நீண்ட காலமாக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதேபோல் தமிழக அரசின் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 6-ம் தேதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.
இதனையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். ரயில் நிலையம் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜ்.ராமசந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் பலகை வைப்பதற்கான பணியை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தேர்தலுக்கு முன்பாகவே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' என்று புதிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதேபோல, பயணச்சீட்டு, ஆன்லைன் முன்பதிவு உள்ளிட்ட அனைத்திலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விறுவிறுப்பு பாஜக-அதிமுகவுக்கு தேர்தலில் பலன் கொடுக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.