Asianet News TamilAsianet News Tamil

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இனி எம்.ஜி.ஆர் பெயர்... அரசாணை வெளியீடு..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் என பெயர் வைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

chennai central railway station name change
Author
Chennai, First Published Apr 6, 2019, 10:17 AM IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் என பெயர் வைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. chennai central railway station name change

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து முதல்வர் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பாக்கத்தில் அதிமுக அதிமுக - பாஜக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் மக்களவைத் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. chennai central railway station name change

அப்போது கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். மேலும் திரையுலகில் மட்டுமல்ல மக்களின் இதயங்களையும் வென்றவர் எம்.ஜி.ஆர். இலங்கை சென்றிருந்தபோது எம்.ஜி.ஆர் பிறந்த இடத்தை பார்வையிட்டேன் என்றும் மோடி தெரிவித்திருந்தார். chennai central railway station name change

இந்நிலையில் சென்னை சென்ட்ரவ் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios