பரபரப்பு !! சென்னையில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலி

சென்னையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் மழை காரணமாக இடிந்த விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. 
 

Chennai Building Collapse 2 dead

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொருத்தவரை கடந்த திங்கள்கிழமை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பழமையான கட்டிடம் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் செளகார்பேட்டையில் ஏகாம்பரேஸ்வரர் அஹ்ரஹாரம் பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தின் தரை தளத்தில் மருந்து கடை, மளிகை கடை உள்ளிட்ட கடைகள் உள்ளன. முதல் தளத்தில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் கட்டிடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, வாடகைக்கு வசித்த வந்த மக்கள் காலி செய்து சென்றுள்ளனர். 

மேலும் படிக்க:வடகிழக்கு பருவமழையால் பதிவான உயிரிழப்புகள் எத்தனை? வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்!!

இதனிடையே இந்த கட்டிடம் நேற்றிரவு திடீரென்று சரிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தில் மருந்து கடை வைத்திருந்த சங்கர், மருந்து வாங்க வந்த அந்த பகுதியை சேர்ந்த கங்குதேவி, கட்டிடத்தில் அருகில் நின்று இருந்த சரவணன், சிவக்குமார் ஆகியோர் இடிப்பாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இதனைதொடர்ந்து அருகில் இருந்த மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த யானைக்கவுனி தீயணைப்பு படையினர், கட்டிடத்தில் இடிப்பாடுகளில் சிக்கியவர்களில் விரைந்து மீட்டனர். இதில் 60 வயதாகும் கங்குதேவி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். 

மேலும் படிக்க:வேலை முடித்து வருவோருக்கு அலர்ட் !! அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 30 மாவட்டங்களில் கனமழை.

இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மற்ற மூன்று பேரும் பலத்த காயங்களுடன் ராஜூவ் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் கட்டிட இடிந்து விழுந்த விபத்தில், பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. இதுக்குறித்து பூக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios