180 கிலோ மீட்டர் வேகத்தில் பைக் ரேஸ்.. தூக்கி வீசிப்பட்ட பெண் எஸ்.ஐ.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி.!
பின்னால் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் 3 பைக்குகளில் அதிவேகமாக வந்தனர். இதில், ஒரு பைக் செல்வகுமாரி ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பைக் ரேஸில் ஈடுபட்ட பூந்தமல்லி, பத்மாவதி நகரைச் சேர்ந்த விஸ்வா (22) என்பவருக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
வண்டலூர் அருகே பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் விபத்தை ஏற்படுத்தியதில் ஸ்கூட்டரில் சென்ற ஓய்வு பெற்ற பெண் காவலர் ஆய்வாளர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரவதனம் (63) ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி. இவரது மனைவி செல்வகுமாரி (61) ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். இவர் நேற்று முன்தினம் இரவு வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள காவல் குடியிருப்பில் தோழியை பார்க்க சென்று விட்டு பின்னர் நேற்று அரும்பாக்கம் செல்வதற்காக வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மண்ணிவாக்கம் அருகே வந்தபோது, பின்னால் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் 3 பைக்குகளில் அதிவேகமாக வந்தனர். இதில், ஒரு பைக் செல்வகுமாரி ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பைக் ரேஸில் ஈடுபட்ட பூந்தமல்லி, பத்மாவதி நகரைச் சேர்ந்த விஸ்வா (22) என்பவருக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரது பின்னால் உட்கார்ந்து வந்த அவரது நண்பரான வண்டலூரைச் சேர்ந்த சரவணன் (21) என்பவருக்கு கையில் முறிவு ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பைக் ரேஸில் ஈடுபட்ட மற்ற வாலிபர்கள் தப்பி சென்று விட்டனர்.
விபத்தில் உயிரிழந்த செல்வகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.