Asianet News TamilAsianet News Tamil

2 மாதங்களில் 267 கிலோ தங்கம் கடத்திய சென்னை யூடியூபர்! அவருக்கு கமிஷன் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

சென்னை விமான நிலையத்தில் உள்ள கடையை மையாக வைத்து கடத்தல் சம்பவம்  நடைபெறுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்கத்துறையின் தீவிர விசாரணையில் இறங்கினர். 

Chennai Airport Gold Smuggling... youtuber arrested tvk
Author
First Published Jul 2, 2024, 2:53 PM IST

சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை விமான நிலையத்தில் தங்கம், போதைப் பொருள், வெளிநாட்டு கரன்சிகள், அரிய வகை வன உயிரினங்கள் கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக துபாய், அபுதாபி, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து கடத்தப்படும் தங்கம் சென்னை விமானம் நிலையம் வழியாக கொண்டு வரப்படுகிறது. சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அடிக்கடி விமான நிலையங்களில் சோதனை ஈடுபட்டு பறிமுதல் செய்து வருகின்றனர். கடத்தலில் ஈடுபடும் நபர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்ள கடையை மையாக வைத்து கடத்தல் சம்பவம்  நடைபெறுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்கத்துறையின் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது சென்னையைச் சேர்ந்த யூடியூபர் மற்றும் கடையின் உரிமையாளருமான சபீர் அலியிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. 

விமான நிலைய புறப்பாடு பகுதியில் செயல்பட்டு வரும் சபீரின் கடைக்கு கடத்தல் தங்கத்துடன் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகள் கழிவறையில் தங்கத்தை வைத்துவிட்டு செல்வார்கள். இதை கடையில் வேலை செய்யும்  ஊழியர்கள் கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்துவிடுகின்றனர். அந்த கடையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 167 கோடி ரூபாய் மதிப்புள்ள 267 கிலோ தங்கம் சபீர் அலியின் கடை மூலமாக கடத்தப்பட்டுள்ளது. இதற்காக 3 கோடி ரூபாய் சபீர் அலி பெற்றுள்ளார். 

சபீர்   அலியின் கடையில் பணியாற்றிய ஊழியர்கள் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அடையாள அட்டையை வைத்திருந்ததால் அவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் போது அடிடக்கடி சோதனை செய்யப்பபடாமல் தப்பித்துள்ளனர். இந்நிலையில், சபீர் அலி, அவர் கடையில் பணியாற்றும் 7 ஊழியர்கள் ஆகிய 9 பேரை கைது செய்து விசாரணையில் நடத்தி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட ஐடி கார்டு கிடைத்தது எப்படி என்றும் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios