சென்னை மெரினாவில் இருசக்கர வாகனத்தில் சென்றிக்கொண்டிருந்த  பெண் காவலர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த பெண் காவலர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

சென்னை ஆயுதப்படையைச் சேர்ந்த பெண் காவலர் பவித்ரா. இவர் இன்று நந்தனத்தில் பணிபுரிவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். பாரதி சாலையில் இருந்து சென்னை மெரினா கடற்கரை சாலைக்கு திரும்பும் போது, அதிகவேகத்தில் வந்த டேங்கர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இந்த விபத்தில் பவித்ரா எதிர்பாராத விதமாக லாரியின் சக்கரத்திற்குள் தலை சிக்கிக்கொண்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 

இது தொடர்பா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு காரணமாக வாகனங்கள் கடும் வேகத்தில் செல்வதாக புகார் வந்த நிலையில் இந்த கோர விபத்து ஏற்படுள்ளது.