பிரபல ரவுடி பினுவின் கூட்டாளியான பல்லு மதனைக் கொலை செய்ய திட்டம் தீட்டி ஆயுதங்களுடன் காரில் சுற்றிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

அடையாறு சிக்னல் அருகே நேற்று நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். காருக்குள் டிரைவருடன் சேர்த்து 5 பேர் இருந்தனர். போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து விசாரிக்க சென்ற போது இருவர் தப்பி ஓடி விட்டனர். 

இதையடுத்து, இருவரைப் பிடித்த வேளச்சேரி போலீசார், காரை சோதனையிட்ட போது கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் தேனாம்பேட்டையைச் சேர்ந்த ராஜா, ஜீவா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தப்பித்து ஓடியவர்கள் ரவுடி வெங்கடேஷ் மற்றும் சுரேஷ் என்பதும் உறுதி செய்யப்பட்டது. 

சென்னையில் பிறந்தநாள் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ரவுடி பினுவின் கூட்டாளியான பல்லு மதன் என்பவரை தீர்த்துக் கட்டும் சதி திட்டத்துடன் 3 பேரும் காரில் சுற்றியது தெரிய வந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கும்பல் ஏற்கனவே தேனாம்பேட்டையில் சிவப்பிரகாஷம் என்ற ரவுடியை, 2 நாட்களுக்கு முன் கொலை செய்ய முயன்றதை போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.