Asianet News TamilAsianet News Tamil

அர்ச்சகர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு.. ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது என்றும் பரம்பரை அறங்காவலர்களால்தான் அர்ச்சகர்கள் நியமிக்க முடியும் என்று தெரிவித்தார். மேலும் 28 மேற்பட்ட ஆகம விதிகள் உள்ளது அந்த ஆகம விதிகளுக்கு உட்பட்டே பணி நியமனம் செய்யப்படவேண்டும். 

Case against the appointment of priests .. Order of action issued by chennai high court
Author
Chennai, First Published Oct 20, 2021, 1:16 PM IST

கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறையின் புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கோவில்களில் அர்ச்சகர்கள்,  பூசாரிகள், பரம்பரை அறங்காவலர் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பணி புதிய விதிகள்  2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில், 18 வயதிலிருந்து 35 வயது வரை உடையவர்கள் மட்டுமே  அர்ச்சகராக  நியமிக்கலாம்  என்றும் மூன்று ஆண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்று விதிகள் உள்ளது. இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் முத்துகுமார் மற்றும் சிஐடி நகரை சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Case against the appointment of priests .. Order of action issued by chennai high court

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் என்னும் இடத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் பரம்பரை பூசாரிகள் எட்டு பேர் உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்.டிஆர்.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது என்றும் பரம்பரை அறங்காவலர்களால்தான் அர்ச்சகர்கள் நியமிக்க முடியும் என்று தெரிவித்தார். மேலும் 28 மேற்பட்ட ஆகம விதிகள் உள்ளது அந்த ஆகம விதிகளுக்கு உட்பட்டே பணி நியமனம் செய்யப்படவேண்டும். ஆகம விதிகளை மீறி அர்ச்சகர்களை நியமிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

Case against the appointment of priests .. Order of action issued by chennai high court

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க  முடியாது. ஆனால் அர்ச்சகர் பணிநியமனங்கள் உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டுள்ளனர். வழக்கு குறித்து தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios