“மாமூல் கேட்டா தரமாட்டியா“... பிரியாணி கடையை சூறையாடிய திமுக பிரமுகரின் தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?
சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் தாம்பரம் மாநகராட்சியில் 31வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினராக சித்ரா தேவி இருந்து வருகிறார். இவரது கணவர் முரளியின் தம்பி தினேஷ் (38) திருநீர்மலை திமுக இளைஞர் அணி செயலாளராகவும் உள்ளார்.
சென்னை திருநீர்மலை பகுதியில் மாமூல் கேட்டு தராததால் டீக்கடை, மற்றும் பிரியாணி கடையை திமுக பிரமுகர் அடித்து உடைத்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாமூல் கேட்டு அட்டகாசம்
சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் தாம்பரம் மாநகராட்சியில் 31வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினராக சித்ரா தேவி இருந்து வருகிறார். இவரது கணவர் முரளியின் தம்பி தினேஷ் (38) திருநீர்மலை திமுக இளைஞர் அணி செயலாளராகவும் உள்ளார். ஆனாலும், அண்ணி கவுன்சிலராக வெற்றி பெற்றதில் இருந்துது ஒயிட் அண்ட் ஒயிட்டில் வலம் வந்துக்கொண்டிருந்தார்.
இதையும் படிங்க;- ஆமாம்.. நான் ரவுடிதான்.. தலை முடியை வெட்ட சொன்ன தலைமை ஆசிரியர்.. பீர் பாட்டிலால் குத்த முயன்ற மாணவன் கைது?
கடைகள் சூறை
அப்பகுதியில் இருக்கும் வணிக வளாகங்கள் சிறு சிறு கடைகளில் மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு முன்தினம் தினேஷ் மற்றும் அவரது நண்பரும், ரவுடியுமான சுகுமார் (32) இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள பிரியாணி மற்றும் டீ கடைகளில் மாமூல் வசூல் கேட்டுள்ளனர். கடை உரிமையாளர்கள் பணம் தர மறுக்கவே ஆத்திரத்தில் கடையை அடித்து உடைத்து தகராறு செய்துள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவில் பதிவாகியது.
காவல் நிலையத்தில் புகார்
இதுகுறித்து கடையின் உரிமையாளர் சிசிடிவி காட்சிகளோடு சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திமுக பிரமுகர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.