உண்மையான எல்லைக்கோட்டை முடிவு செய்வதில் மட்டுமே இந்தியா - சீனா இடையே விரும்பத் தகாத சில சம்பவங்கள் நடக்கின்றன,’’ என மக்களவையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

காஷ்மீர் மாநிலம், லடாக்கின் டெம்ஷோக் பகுதியில் 6 கிமீ தொலைவுக்கு சீன ராணுவம் அத்துமீறி உள்ளதாக மக்களவையில் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சியின் தலைவர் அதிர் ரஞ்ஜன் சவுத்ரி நேற்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் பேசியதாவது: எல்லையில் ஊடுருவலை கட்டுப்படுத்த, இந்தியாவும், சீனாவும் சில வழிமுறைகளை பின்பற்றுகின்றன. கடந்த 2017ம் ஆண்டு டோக்லாம் எல்லையில் சீன ராணுவம் ஒரு மாதத்துக்கும் மேலாக முகாமிட்டு இருந்ததை இந்திய ராணுவம் முழுமையாக கட்டுப்படுத்தியது. இதன் மூலம், இந்திய - சீன எல்லையில் நிலமை மேம்பட்டுள்ளது. பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனாவின் உகான் நகரில் நடத்திய அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில், எல்லையில் அமைதியை நிலவ செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.

இந்திய எல்ைலயின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு விழிப்புடன் இருப்பது மட்டுமின்றி, குறிப்பிட்ட கால இடைவெளியில் எல்லை தொடர்பாக மறுஆய்வும் செய்யப்பட்டு வருகிறது. அதுபோன்ற நிலையில், காங்கிரஸ் இந்த கேள்வியை அவையில் எழுப்பியது ஏன்?

இந்திய - சீன எல்லை பகுதியில் மலைப்பாதை, சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் வான்வழி போக்குவரத்து தொடர்பான கட்டுமான பணிகளிலும், திட்டமிடுதலிலும் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. இருநாட்டு அரசுகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேசிய பாதுகாப்பு அமைப்பு மற்றும் இணை செயலாளர் மட்டத்திலான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றன.

உகானில் நடந்த இருதரப்பு தலைவர்கள் சந்திப்புக்கு பிறகு, இருநாட்டு ராணுவத்துக்கும் யுத்தகால வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. அதன்படி, எல்லையில் அமைதி நிலவுவதை உறுதி செய்ய, இருநாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு மதிப்பு கொடுத்து வருகிறோம். எல்லையில் தற்போது அமைதி நிலவுவதில் மேம்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், உண்மையான எல்லைக்கோடு எது என்பது தொடர்பாக தான், இருநாடுகளுக்கும் இடையே அடிக்கடி விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றனர்.