சென்னையில் பாஜக பிரமுகர் படுகொலை வழக்கு.. பாதுகாப்பு காவலர் மீது பாய்ந்த நடவடிக்கை..!
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக பிரமுகர் பாலச்சந்தர் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நேற்று இரவு வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக பிரமுகர் பாலச்சந்தர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது பாதுகாவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக பிரமுகர் பாலச்சந்தர் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நேற்று இரவு வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் 7 தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். பாஜக பிரமுகரை கொலை செய்தது பிரதீப், சஞ்சய் மற்றும் கலைவாணன் என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே, பாலச்சந்தருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் இருந்து வந்ததால் தமிழக காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று பலாச்சந்தர் பல் மருத்துவமனைக்கு செல்லும் போது ஆயுதம் ஏந்திய போலீஸ் கூட வராததே கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தனது நண்பருடன் செல்வதால் நீங்கள் ஓய்வு எடுங்கள் என்று பாலச்சந்தர் பாதுகாப்பு அதிகாரியிடம் கூறியுள்ளார். ஆகையால், தனி பாதுகாப்பு அதிகாரி பாலச்சந்திரனுடன் செல்லவில்லை.
24 மணிநேரமும் கூட இருக்க வேண்டும் என்ற உத்தரவை மீறி பாலச்சந்திரனை தனியாக அனுப்பியதாகவும், பாதுகாப்பு பணியில் அலட்சியமாக இருந்ததால் பாலமுருகனை காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.