பைக் மீது லாரி பயங்கர மோதல்.. மருமகன், மாமியார் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலி.!
ஸ்ரீபெரும்புதூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மருமகன், மாமியார் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மருமகன், மாமியார் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை போரூர் பகுதியில் வசித்து வருபவர் அம்மையப்பன் (42). இவரின் மாமியார் பெத்தநாச்சி (57). இருவரும் காஞ்சிபுரத்தில் இருந்து நேற்று சென்னை நோக்கி பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் போரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் சுங்கச்சாவடி அருகே சென்றுக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
இதையும் படிங்க;- பள்ளி வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்த ஆசிரியர்கள்? வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு..!
பின்னர், இருவரும் தவறி கீழே விழுந்தனர். அப்போது, பின்னால் அதிவேகத்தில் வந்த லாரியின் பின் பக்க சக்கரத்தில் சிக்கியதில் இருவர் மீதும் லாரி ஏறி இறங்கியதில் தலை நசுங்கி ரத்த வெள்ளதத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தத விபத்து தொடர்பாக போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- லாரி மீது பயங்கரமாக மோதிய வேன்.. மணப்பெண் படுகாயம்? அதிர்ச்சியில் மாப்பிள்ளை வீட்டார்.. அப்புறம் நடந்தது என்ன?
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.