Chennai Beaches: சென்னையில் மிகவும் தூய்மையான கடற்கரை எது? மாநகராட்சி தரவரிசை வெளியீடு
கழிவுகளைச் சிறப்பாகக் கையாளும் பெசன்ட் நகர் கடற்கரை சென்னையின் மிகத் தூய்மையான கடற்கரையாக உள்ளது.
சென்னையில் உள்ள ஏழு கடற்கரைகளில் பெசன்ட் நகர் கடற்கரைதான் மிகவும் தூய்மையானது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நீலாங்கரை கடற்கரை இதில் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், திருவொற்றியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை ஆகிய கடற்கரை பகுதிகள் உள்ளன. ஏழு கடற்கரைகளிலும் பராமரிப்புப் பணிகளை கண்காணிக்க சிறப்புக் குழுக்களை சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது. வடசென்னையில் உள்ள பல கடற்கரை பகுதிகளும் விரைவில் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும்.
பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேருவதைத் தடுத்து கடல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், கடற்கரையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
Baadal Nanjundaswamy: கன்னட எழுத்துகளை கண்கவர் ஓவியங்களாக மாற்றிய கலைஞர்
மாநகராட்சி அளிக்கும் தகவலின்படி, பெசன்ட் நகரில் உள்ள 336 கடைகளும் கழிவுகளை தரம் பிரித்து, வழங்கத் தொடங்கியுள்ளன. பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தியதை அடுத்து அனைத்து கடைகளும் கடற்கரையில் குப்பை கொட்டுவதை நிறுத்திவிட்டன.
பெசன்ட் நகரில் துப்புரவு பணி, வீடு வீடாகச் சென்று குப்பை சேகரித்தல், கழிவறைகளை சுத்தம் செய்தல் போன்ற தூய்மைப் பணிகளில் கூடுதலாக ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
வடசென்னையில் உள்ள திருவான்மியூர் கடற்கரையில் மணல் சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் பயன்படுத்தவில்லை. பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை பகுதிகளில் போதிய ஆட்கள் இல்லாததால் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி சுணக்கமாக உள்ளது.
இதுபோன்ற பகுதிகளில் துப்புரவு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய ஆற்றுப் பகுதிகளில் குப்பைகள் குவிவதை தடுக்கவும் மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.
மெரினா கடற்கரையில், 200க்கும் மேற்பட்ட கடைகள் குப்பைகளை பிரித்து வழங்கத் தொடங்கவில்லை. மெரினா போன்ற கடற்கரைகளில் தூய்மைப் பணிக்கு கூடுதல் ஆட்கள் தேவை என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Natasha Perianayagam: இந்த 13 வயது சிறுமிதான் உலகிலேயே புத்திசாலி மாணவி! எல்லா டெஸ்டிலும் நம்பர் 1!