Asianet News TamilAsianet News Tamil

பரிதாப நிலையில் பொறியியல் கல்லூரிகள்… 3-வது சுற்று முடிந்தும் ஒரு இடம் கூட நிரம்பாத கல்லூரிகளின் பட்டியல்..!

பொறியியல் இளங்கலை படிப்புகளில் கம்ப்யூட்டர் பாடப்பிரிவுகளையே சரிபாதி மாணவ, மாணவிகள் தேர்வு செய்துள்ளனர்.

BE Engineering counciling 3rd round over - 21 colleges didn't get even one student
Author
Chennai, First Published Oct 13, 2021, 6:17 PM IST

பொறியியல் இளங்கலை படிப்புகளில் கம்ப்யூட்டர் பாடப்பிரிவுகளையே சரிபாதி மாணவ, மாணவிகள் தேர்வு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 1.47 லட்சம் இடங்களுக்கான கலந்தாய்வில் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வின் முதல் சுற்று கடந்த 27-ஆம் தேதி தொடங்கியது.   

BE Engineering counciling 3rd round over - 21 colleges didn't get even one student

முதல் சுற்றில், 10,148 மாணவர்களும், 2-வது சுற்றில், 20,438 பேரும் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்தனர். இந்தநிலையில் மூன்றாவது சுற்றுக்கு அழைக்கபட்ட 40,891 மாணவர்களில் 23,716 மாணவர்கள் மட்டுஏ தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மூன்று சுற்றுகளிலும் 55,378 பேர் மட்டுமே தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். இதில் 24,165  பேர் அதாவது 44.8 சதவீதம் மாணவர்கள் கம்ப்யூட்டர் பாடப்பிரிவுகளை தேர்வு செய்துள்ளனர்.

BE Engineering counciling 3rd round over - 21 colleges didn't get even one student

மொத்தமுள்ள 440 கல்லூரிகளில் மூன்றாவது சுற்று வரை 21 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. 327 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கு குறைவாகவும், 152 கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கு கீழாகவும் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. 44 கல்லூரிகளில் ஒரு சதவீதத்திற்கு கீழ் மாணவர் சேர்க்கை உள்ளது. நான்காவது சுற்று வரும் 17ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் 60 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios