என்ன பாவம் செய்ததோ தமிழகம்! இளம்பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வக்கிர அத்துமீறல்கள் தொடர்பாக அவ்வப்போது புகார் குண்டுவெடிப்புகள் ஆதாரத்தோடு நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த சம்பவங்களால்  மாநிலத்தின் மாண்பும், மரியாதையும் மானபங்கப்படுத்தப் படுவதுதான் பெரும் கொடுமை. 

லேட்டஸ்ட் பஞ்சாயத்து சென்னை தாம்பரம் ‘மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் ’ (எம்.சி.சி.) க்குள்ளிருந்து வெடித்திருக்கிறது. கொஞ்சம் லேட்டாக வெளியே வந்தாலும் கூட வெப்பம் குறைவில்லை பிரச்னையில். பேராசிரியர்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்களை கிளப்பியிருப்பது விலங்கியல் மூன்றாவது ஆண்டு மாணவிகள்தான். 

அவர்கள் அடுக்கும் புகார்கள் இதுதான்...
*    மூன்று மாசமா இந்த பிரச்னையை வெச்சு, அசிங்க பேராசிரியர்களுக்கு எதிராக போராடிட்டு இருக்கிறோம். ஆனால் தீர்வு இல்லை. 

*    அதாவது விலங்கியல் துறையை சேர்ந்த நாற்பத்தாறு மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலாவாக போன ஜனவரி மாசம் கர்நாடகா போனோம். எங்க துறையின் பேராசிரியர்களான ரவீண், சாமுவேல் டென்னிசன், பெண் பேராசிரியை ஒருவர் உட்பட ஆறு பேர் எங்களை அழைச்சுட்டு போனாங்க. பெங்களூரு போற வரைக்கும் ஓ.கே.தான். ஆனா அங்கே போன பிறகுதான் ஆண் பேராசிரியர்கள் சில வேலையை காட்ட ஆரம்பிச்சாங்க. 

*    குறிப்பா பேராசிரியர் ரவீண், சில பொண்ணுங்களை கண்ட இடத்துலேயும் கை வெச்சார். கர்நாடகாவுல ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடம் போறப்ப ஒரு மாணவியை தன்னோட மடியில உட்கார சொல்லி கட்டாயப்படுத்தினார். சக்ஸஸ் பண்ணவும் செஞ்சார். 

*    நாங்க எவ்வளவு கோபத்தை காட்டினாலும், அலட்டிக்காம எங்களோட  பின்புறத்துல தட்டி, அசிங்கப்படுத்தினார் ரவீணும், இன்னொரு பேராசிரியரும். எங்க கூட வந்த பேராசிரியைட்ட இதை சொன்னாலும், அவரால ரவீணை அடக்க முடியலை. 

*    ராத்திரியில எங்க ரூமுக்குள்ளே வந்த ரவீண், சாமுவேல் ரெண்டு பேரும் எங்க கட்டில்ல உட்கார்ந்துகிட்டு அசிங்க அசிங்கமா ஜோக் அடிச்சாங்க. எங்க ரூம்லேயே படுக்க ட்ரை பண்ணினாங்க. ஆனால் நாங்க போராடி வெளியில அனுப்பினோம். போறப்ப, ‘சரி சினிமாவுக்காச்சும் போலாம் வா.’ன்னு சில பொண்ணுங்களை இழுத்துப்பார்த்தாங்க. முடியலை.

*    அருவியில குளிக்கப் போனோம். அப்போ எங்களோட டிரெஸ்ஸை பத்தி ஆபாசமா கிண்டல் பண்ணினாங்க. ‘டைட்டா டிரெஸ் பண்ணிட்டு போயி அருவியில குளிங்கம்மா’ன்னு பிரஷர் கொடுத்தாங்க. எங்களாலே இதை வீட்டுக்கு போன் பண்ணி சொல்ல முடியலை. காரணம், எதுக்கெடுத்தாலும் ‘எக்ஸாமுக்கு எங்ககிட்ட வந்துதானே ஆகணும் உங்க பேப்பர்.’ன்னு தெனாவெட்டா சொன்னாங்க. 

*    டூர் முடினுசு காலேஜ் திரும்பியதும், இவங்களோட அட்டூழியத்தை பத்தி பிரின்ஸிபால் அலெக்ஸாண்டர் ஜேசுதானிடம் புகார் கொடுத்தோம். அவரோ இதை விசாரிச்சு, நடவடிக்கை எடுக்க சொல்லி எங்க துறையின் தலைவர் மோசஸ் இன்பராஜூக்கு உத்தரவு போட்டார். விசாரணைக்கு கூப்பிட்ட இன்பராஜோ, ரொம்ப கேவலமா எங்களை கிண்டல் பண்ணி அனுப்பிட்டார். இதை கண்டிச்சுன் ஏப்ரல் 6-ம் தேதி எங்க டிபார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டி. ரூம் முன்னாடி ஆர்பாட்டம் நடத்தினோம். உடனே ‘பிராக்டிகல் மார்க், இன்டெர்னல் மார்க்ல கைவைப்போம்.’ன்னு மிரட்டினாங்க. ஆனாலும் நாங்க பயப்படாம போராடினோம். 

*    உடனே எங்களை அழைச்சு, அந்தர் ரெண்டு பேராசிரியர்களையும் கண்டிப்பதாகவும், ரெண்டு பேரும் தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், இனி 3 வருஷம் அவங்க இப்படி மாணவிகளை டூர் கூட்டிட்டு போக தடை போடுவதாகவும், மூன்றாமாண்டு மாணவ மாணவிகளின் பேப்பரை திருத்த அவங்களௌக்கு தடை போடுவதாகவும் சொன்னாங்க. இந்த ரவீண் ஏற்கனவே 1997-ல் ஒரு மாணவிட்ட தவறா நடந்து சஸ்பெண்ட் ஆனவரேதான். 

இது எங்களுக்கு தெரிய வந்ததாலே நாங்க, இந்த நடவடிக்கையில் சமாதானம் அடையல. பிரின்ஸிபால் ரூமை முற்றுகையிட்டு போராடினோம். உடனே கல்லூரி முதல்வர், டீன் விஜயகுமாரி தலைமையில் பெண் வழக்கறிஞர் உட்பட ஐந்து பேர் விசாரணைக் கமிட்டியை அமைச்சார். விசாரணை நடந்துச்சு. போன வாரம் இதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, தவறு செய்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்னு சொன்னாங்க. ஆனால் இதுவரையில் ரிப்போர்ட் வரலை. 

இந்த நிலையில வெளியாட்களை வெச்சு, பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பங்களை கல்லூரி நிர்வாகம் மிரட்டுது. ஆனால் நாங்க பயப்படலை. வரும் 25-ம் தேதிக்குள் நிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுக்கலேன்னா, ஆதாரங்களுடன் போலீஸுக்கு போவோம், பிரஸ்ஸை சந்திப்போம், மக்கள் முன்பாக இந்த நபர்களின் முகத்திரையை கிழிக்க  ரோட்டில் உட்காருவோம்.” என்பதுதான் 
புகாரில் உண்மையிருந்தால், தூக்கி உள்ளே போடுங்க சார் அந்த டுபாக்கூர் பேராசிரியர்களை.