சென்னை அம்பத்தூரில் ரியல் எஸ்டேட் அதிபர் தினேஷ் பாபு வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அம்பத்தூர் ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜ் (63). இவரது மகன் தினேஷ் பாபு (35). இவர் பேட்மிண்டன் பயிற்சியாளராகவும் ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வந்துள்ளார். இவர், அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் உள்ள பேட்மிண்டன் மையத்திற்கு, தினசரி காலை, மாலையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 

வழக்கம் போல நேற்று மாலை பேட்மிண்டன் பயிற்சி மையத்திற்கு இருசக்கர வாகனத்தில் தினேஷ்பாபு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஆட்டோவில் 4 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து வந்தது. பின்னர் அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தினேஷ்பாபுவை வழிமறித்து அரிவாளால் தலை, முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. 

இதையும் படிங்க: அலறிய சென்னை மக்கள்! நடுரோட்டில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை! அடுத்த சில நிமிடத்தில் மற்றொரு பயங்கரம்!

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தினேஷ்பாபுவை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தவிட்டதாக தெரிவித்தனர். 

இதையும் படிங்க: ஓவர் ஸ்பீட்.! பைக்கை பறித்த போலீஸ்- மாணவர் எடுத்த விபரீத முடிவு- மேட்டூரில் அதிர்ச்சி

இதுகுறித்து அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தினேஷ்பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தினேஷ்பாபு தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா வேறு எதேனும் காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது.