என்னங்க டேட் ஆச்சு இன்னும் மாமூல் வந்து சேரல.. விபச்சார புரோக்கரிடம் போலீஸ் லஞ்சம் கேட்கும் ஆடியோ..!

சென்னை மாநகரில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறது. இந்த சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த ரகசிய தகவலின் பேரில், மேற்படி குற்றவாளிகளை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். 

Audio of police asking for bribe from prostitution broker

பாலியல் புரோக்கரிடம் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மாநகரில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறது. இந்த சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த ரகசிய தகவலின் பேரில், மேற்படி குற்றவாளிகளை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவின், விபச்சார தடுப்புப்பிரிவு காவல் குழுவினர் மூலம் கண்காணித்து விபச்சார தரகர்களை கைது செய்து, அப்பாவி பெண்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க;- மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சார தொழில்.. அதிரடி ரெய்டில் அறைகுறை ஆடைகளுடன் சிக்கிய இளம்பெண்கள்..!

Audio of police asking for bribe from prostitution broker

இந்நிலையில், சென்னையில் விபச்சார தொழில் நடைபெறும் பல மசாஜ் சென்டர்களில் காவல்துறையினர் லஞ்சம் வாங்கிக்கொண்டு  நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பாலியல் புரோக்கரிடம் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அதில், ஆடியோவில் சென்னை விபச்சார தடுப்பு பிரிவில் பணிபுரியும் காவலர் ஒருவர் மாதம் தோறும் மாமூல் பணத்தை கொடுத்து வருவதாக புரோக்கர் பேசியுள்ளார். மேலும் தற்போது மாமூல் வந்து சேரவில்லை காவலர் கூறுகிறார். ஏற்கெனவே மாமூல் கொடுத்து விட்டதாகவும், இருப்பினும் சில நிமிடங்களில் அதனை உறுதி செய்வதாகவும் அந்த புரோக்கர் பதிலளித்துள்ளார்.

Audio of police asking for bribe from prostitution broker

இதன் மூலம் மசாஜ் பார்லர் உரிமையாளர் மற்றும் புரோக்கர்களிடம் காவல்துறையினர் லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக விபச்சார தொழில் நடப்பதற்கு ஒத்துழைப்பு அளித்து வருவது இந்த ஆடியோ மூலம் உறுததியாகியுள்ளது. இந்த ஆடியோ ஆதாரத்தை அடிப்படையாக வைத்து விபச்சார தடுப்பு பிரிவு காவலரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் துறைரீதியான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிங்க;-  சென்னையில் மஜாவாக நடந்து வந்த விபச்சாரம்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா? கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios