அமைதியான ரயில் நிலையம் என்ற அறிவிப்பு வாபஸ்.... மீண்டும் சென்னை சென்ட்ரலில் ஒலிப்பெருக்கி அறிவிப்புகள்!!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அமைதியான நிலையம் என்று வெளியிட்ட அறிவிப்பை தெற்கு ரயில்வே திரும்பப்பெற்றுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அமைதியான நிலையம் என்று வெளியிட்ட அறிவிப்பை தெற்கு ரயில்வே திரும்பப்பெற்றுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி இந்த ரயில் நிலையத்தில் இருந்து ஏறத்தாழ 1.5 லட்சம் பயணிகள் தினமும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தை அமைதியான ரயில் நிலையமாக கடந்த வாரம் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதையும் படிங்க: வேலையை வாங்கிவிட்டு சம்பளம் தராமல் விரட்டியடிக்கின்றனர்; வடமாநில தொழிலாளர்கள் பரபரப்பு புகார்
இந்த அறிவிப்பை அடுத்து ரயில் நிலையத்தில் ஒலிப்பெருக்கியில் ரயில்களின் வருகை குறித்த அறிவிப்புகள் நிறுத்தப்பட்டன. மேலும் பல்வேறு அறிவிப்புகள் மிக சப்தமாக ஒலிபரப்பப்படுகின்ற காரணத்தால், பயணிகளுக்கும், பாதுகாப்புப் பணியில் இருப்பவர்களுக்கும் ஏற்படும் சிரமத்திற்கு தீர்வுகாணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மாசி மகத்தை முன்னிட்டு மகாமகம் குளத்தில் நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்
ஆனால் இதற்கு மாற்றுத்திறனாளிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்வி அறிவு கிடைக்கப் பெறாத மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அமைதியான நிலையம் என்று வெளியிட்ட அறிவிப்பை தெற்கு ரயில்வே திரும்பப்பெற்றுள்ளது. இதை அடுத்து சென்னை சென்ட்ரலில் மீண்டும் ஒலிபெருக்கிகளில் ரயில்களின் வருகை குறித்து அறிவிப்புகள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.