கல்லூரி வகுப்பறையில் பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை... அலறியடித்துக்கொண்டு வெளியேறிய மாணவிகள்..!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் இன்று காலை பேராசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

arumbakkam vaishnav college professor suicide

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் இன்று காலை பேராசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

arumbakkam vaishnav college professor suicide

சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது டி.ஜி.வைஷ்ணவா பெண்கள் கல்லூரி. இங்கு பேராசிரியையாக பணிபுரிந்தவர் ஹரிசாந்தி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நின்றுவிட்டார். ஆனால், அடிக்கடி கல்லூரிக்கு வந்து செல்வார். இன்று காலையிலும் எப்போதும் போல ஹரிசாந்தி கல்லூரிக்கு வந்தார். திடீரென தான் பாடம் நடத்திய முதல் தளத்தில் உள்ள வகுப்பறைக்கு சென்றார்.

arumbakkam vaishnav college professor suicide

இந்நிலையில், தனது கைகளை பிளேடால் கிழித்த ஹரிசாந்தி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை நேரில் கண்ட மாணவிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். இது தொடர்பாக உடனே அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பேராசிரியை ஹரிசாந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அக்கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios