சென்னை பெரியமேட்டில் உள்ள தனியார் விடுதியில் ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ், சென்னை புதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி முதல் பணிக்கு வராமல் சுரேஷ் பெரியமேட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். 

இந்நிலையில், அவரின் அறை கதவு  நீண்ட நேரமாகியும் திறக்காததால் சந்தேகமடைந்த உணவக விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு வேறு சாவியை போட்டு கதவை திறந்துள்ளனர். அப்போது விஷம் அருந்திய நிலையில் சுரேஷ் உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், பணிச்சுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இந்த விடுதி அறையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.