மீண்டும் சுனாமி வந்தால் சென்னையில் 2 கி.மீ. குலோஸ்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கடந்த 2004ம் ஆண்டு சுனாமி தாக்கிய நிலையில், மீண்டும் அதுபோல் ஒரு சுனாமி ஏற்பட்டால் சென்னையில் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு கடல் நீர் ஊருக்குள் புகுந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கடல் பரப்புக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கடல் அலைகள் வழக்கத்திற்கு மாறாக பல அடி தூரம் உயர்ந்து கடல் நீர் ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. கடல் நீரில் சிக்கி தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ம் தேதி துக்கம் அனுசரிக்கும் விதமாக கடற்கரைகளில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
கடலூரில் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதல்; நூற்றுக்கணக்கில் செத்து மடிந்த உயிர்கள்
இந்நிலையில் சென்னையில் உள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் ஆகியவை ஆய்வு செய்து வெளியிட்டுள்ள தகவலில், கடற்கரையின் அடியில் அமைந்துள்ள நிலப்பரப்பு சாய்வாக இருந்தால் அதனை ஒட்டியுள்ள கரை பகுதியில் பாதிப்பு அதிகமாக இருக்கும். கடல் பரப்பு மேடாக இருந்தால் பாதிப்பு குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மீண்டும் சுனாமி ஏற்படும் பட்சத்தில் சென்னையில் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு கடல் நீர் ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது கடலூர், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல்நீர் ஊருக்குள் புகும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் மாநில அந்தஸ்து கோரி இன்று முழு அடைப்பு போராட்டம்
இருப்பினும் சுமார் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சுனாமி போன்ற பாதிப்புகள் நிகழக் கூடும் என்ற சற்று ஆறுதலான தகவலையும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.