அடிக்கும் வெயிலில் அரைகிறுக்குதான் பிடிக்கிறது. மழை பெய்யுமா என யோசனை  செய்யும் நமக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சியான தகவலை கொடுத்திருக்கிறது. அதில்,தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடுவதோடு, பலத்த காற்று வீச வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதனால் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, சேலம்,உள்ளிட்ட  மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், அப்போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளாதாகவும், சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.