Asianet News TamilAsianet News Tamil

மக்களே கேட்டுக்குங்க... 20 ஆம் தேதிக்கு பிறகு, தமிழகம் முழுவதும் பிச்சு உதறப்போகிறது மழை...!!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி தூத்துக்குடி, திருநெல்வேலி ராமநாதபுரம்,விருதுநகர் திருச்சி, நீலகிரி, கோவை சேலம் ,தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

alert to public,  north east monsoon  will start oct 20 - chennai meteorology department announced
Author
Chennai, First Published Oct 9, 2019, 2:37 PM IST

வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாத்திய கூறுகள் அக்டோபர் 20 ஆம் தேதிக்கு மேல் நிலவும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.alert to public,  north east monsoon  will start oct 20 - chennai meteorology department announced

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி தூத்துக்குடி, திருநெல்வேலி ராமநாதபுரம்,விருதுநகர் திருச்சி, நீலகிரி, கோவை சேலம் ,தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. alert to public,  north east monsoon  will start oct 20 - chennai meteorology department announced

அதேபோல் கன்னியாகுமரி நெல்லை,மதுரை திண்டுக்கல், சேலம், நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.அதே போல் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி பகுதியில் 7செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் வால்பாறை கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் 5செ.மீ மழையும் சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

alert to public,  north east monsoon  will start oct 20 - chennai meteorology department announced

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு, அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று தெரிவிக்கப்
பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios