நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவை நண்பகல் 12 மணி முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால், நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் இல்லாத காரணத்தால் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7  மாவட்டங்களில் கடந்த 24ம் தேதி பகல் 1 மணி முதல் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அதேபோல், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் நேற்று, இன்று ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையம், மெட்ரோ நிலையங்கள் ஆகியவை நேற்று இரவு 7 மணி முதல் மூடப்பட்டன.

நேற்று நள்ளிரவில் புயல் கரையை கடந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணி முதல் மேற்கூறிய 7 மாவட்டங்களிலும் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. அதேபோல், சென்னை மெட்ரோ ரயில் சேவையும் மதியம் 12 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிவர் புயல் கரையை கடந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணி முதல் 7 மாவட்டங்களில் மீண்டும் அரசு பேருந்துகள் மீண்டும் தொடங்கியுள்ளது. அதேபோல், சென்னை மெட்ரோ ரயில் சேவை மற்றும் விமான சேவையும் தொடங்கியுள்ளது.