Asianet News TamilAsianet News Tamil

பால் தட்டுப்பாடு அபாயம்..! சென்னை ஆவின் பால் பண்ணையில் 2 ஊழியர்களுக்கு கொரோனா..!

சென்னை மாதவரம் ஆவின் பால்பண்ணையில் 2 தொரிழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பால் பாக்கெட்டை லாரியில் ஏற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணிக்கு வராததால் ஆவின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Aavin milk plant staff test positive for COVID-19
Author
Chennai, First Published May 4, 2020, 2:43 PM IST

சென்னை மாதவரம் ஆவின் பால்பண்ணையில் 2 தொரிழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பால் பாக்கெட்டை லாரியில் ஏற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணிக்கு வராததால் ஆவின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Aavin milk plant staff test positive for COVID-19

மாதவரம் பால் பண்ணை பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 3 ஷிப்ட்களில் பணிபுரிந்து வருகின்றனர்.  இங்கு, உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுகள் சுமார் 40 லாரிகள் மூலம் தினசரி சென்னையில் உள்ள பல்வேறு விநியோகஸ்தர்களுக்கும்,  பொதுமக்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில், பால் பண்ணை பகுதியில் வசிக்கும் ஆவின் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்,  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, ஆவின் நிறுவனத்தில் பாதுகாப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.  

Aavin milk plant staff test positive for COVID-19

இதுபற்றி அறிந்த சக ஊழியர்கள், தங்களுக்கும் நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் நேற்று வேலைக்கு வரவில்லை. இதனால், உற்பத்தி  பாதிக்கப்பட்டது. இதையடுத்து, லாரி ஓட்டுனர்கள், கிளீனர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பால் பாக்கெட் உற்பத்தி மற்றும் ஏற்றுதல், இறக்குதல்  பணியில் ஈடுபட்டனர். இதனால், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணிக்கு வராததால் ஆவின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, பொதுமக்கள் உயிரோடு விளையாடாதீர்கள், ஆவின் பால் பண்ணையை மூடி சீலிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்" என்று தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios