பொதுமக்களுக்கு நிவாரண பொருள் வழங்கிய அண்ணாமலை; ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிவாரணப் பொருள் வழங்கிய நிலையில், ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் வெளிவரும் எண்ணத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், தன்னார்வலர்கள் என பல தரப்பினரும் தங்களது அமைப்பு சார்பாகவும், தனிப்பட்ட விதத்திலும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
அப்போது கூட்டத்திற்குள் செல்லவும், பின்பு கூட்டத்திலிருந்து நிவாரண பொருட்களை வாங்க வருபவர்களுக்கும் மிகவும் சிரமம் ஏற்பட்டது. இதில் அண்ணாமலை கட்சி உறுப்பினர்களை கூட்டத்தில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். இருந்தும் கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் இருந்து விலகாமல் கூட்டத்தில் இருந்ததால், பொதுமக்கள் நிவாரண பொருள் வாங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
நெல்லை சட்டக்கல்லூரி அருகே பட்டப்பகலில் தொழிலதிபர் வெட்டி படுகொலை; போலீசார் அதிரடி விசாரணை
மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சாலையில் பொதுமக்கள் கூட்டம் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சியை முறையாக ஏற்பாடு செய்யாத காரணத்தால் பெண்கள், முதியவர்கள் கூட்டத்திற்குள் சிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கடும் அவதிக்குள்ளானதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.