தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தருமபுரி, சேலம், விழுப்புரம், உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அவ்வப்போது ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். அக்டோபர் 1-ம் தேதி வரை தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 9 செ.மீ., மழையில் இதுவரை 8 செ.மீ., மழை கிடைத்துள்ளது. 

தமிழகத்தில் வரும் 21, 22-ம் தேதிகளில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் கூறுகையில்;- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று முதல் 20-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தருமபுரி, சேலம், விழுப்புரம், உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அவ்வப்போது ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். அக்டோபர் 1-ம் தேதி வரை தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 9 செ.மீ., மழையில் இதுவரை 8 செ.மீ., மழை கிடைத்துள்ளது. 

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் சென்னை அயனாவரத்தில் 13 செ.மீ., பெரம்பூரில் 12 செ.மீ., டி.ஜி.பி.அலுவலகம் 9 செ.மீ., நீலகிரி மாவட்டம் குன்னூரில் 8 செ.மீ., பொள்ளாச்சியில் 7 செ.மீ., அம்பத்தூரில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.