பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த 6 சிறுபான்மை பிரிவினருக்கு குடியுரிமை வழங்கும் நோக்கில்தான் குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் குடியுரிமை மசோதா குறித்து காங்கிரஸ் எம்பி பிரத்யுத் போர்டோலாய் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலமாக அளித்த பதில்;

குடிமக்கள் திருத்த மசோதா-2016, 3 ஆண்டுகளுக்கு முன் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர். நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த, உரிய ஆவணங்கள் இல்லாத 6 சிறுபான்மை சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் நோக்கத்தில்தான் இந்த குடியுரிமை திருத்த மசோதா உருவாக்கப்பட்டது. இந்த திருத்த மசோதா மக்களவையில் 2019, ஜனவரி 8ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் உள்ளது. 16வது மக்களவை கலைக்கப்பட்டதால் இந்த மசோதா காலாவதியாகி விட்டது என்றார்.