சென்னை விமான நிலையத்தில் கிலோ கணக்கில் தங்கம் கடத்தல்: 3 பெண்கள் கைது

கொழும்பு, பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.209 கிலோ எடை கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக 3 பெண்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

53 lakh worth gold seized chennai airport at 3 women passengers

இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையமாக உள்ளது. நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணகள் சென்னை வழியாக வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் அதிகரிப்பதைப் போன்று கடத்தல் பொருட்களும் அதிக அளவில் புலக்கத்தில் உள்ளது.

பழனியில் PFI அமைப்பின் மண்டல தலைவரிடம் என்ஐஏ இரண்டாவது நாளாக விசாரணை

அதன்படி கடந்த 2022 ஜனவரி முதல் தேதியில் இருந்து 2022 ஜனவரி டிசம்பர் 31ஆம் தேதி வரையில் நடத்திய சோதனையில், ரூ.94.22 கோடி ரூபாய் மதிப்பிலான 205.84 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்கம் கடத்தல்கள் சம்பந்தமாக 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட 97 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஓராண்டில் மட்டும் 124.88 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 122 கடத்தல் ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கணிசமானோர் பெண்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டில் சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 70.12 கோடி மதிப்புடைய 157 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2022ம் ஆண்டில் அது ரூபாய் 94.22 கோடி 205 கிலோவாக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு பின் மாரடைப்பை தடுக்க அமைச்சர் மா சுப்ரமணியன் சொல்லும் ஆலோசனை

இந்நிலையில் கொழும்பு மற்றும் பாங்காக்கில் இருந்து இருவேறு விமானங்களில் சென்னை வந்த பெண் பயணிகள் மூவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் அவர்களிடம் இருந்து 1.209 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.53 லட்சம் என்று கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios