தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட அதிகமான பரிசோதனை செய்வதால்தான் அதிகமான பாசிட்டிவ் கேஸ்கள் கண்டறியப்பட்டுவருகின்றன. அதனால் தான் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. 

நேற்று முன் தினம் தமிழ்நாட்டில் 798 பேரும் நேற்று 716 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 509 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துவிட்டது. தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9227ஆக அதிகரித்துள்ளது. 

இன்று சென்னையில் 380 பேருக்கு தொற்று உறுதியானதால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 5262ஆக அதிகரித்துள்ளது. எனவே 3965 பேர் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். 

பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்ததால், மகாராஷ்டிராவுக்கு அடுத்து இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு தான். குஜராத்தை பின்னுக்குத்தள்ளி பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாமிடத்தில் உள்ளது.

இன்று 42 பேர் குணமடைந்ததையடுத்து இதுவரை 2176 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் இறப்பு விகிதம் 0.7% என்ற விகிதத்திலேயே உள்ளது.