அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக ரூ.159 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 500 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, ஜெயக்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு மொத்தம் ரூ.1500 கோடி ரூபாய் செலவில் 5000 புதிய பேருந்துகளை வாங்க அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.1001 கோடி செலவில் 3381 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழச்சியில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்காக ரூ.159 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 500 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

சென்னை மாநகர போக்குவரத்திற்கு 100 பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துககளும், டெல்டா மாவட்டங்களான நெல்லை, கோவை, சேலம், மதுரை, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய 6 கோட்டங்களுக்கு 250 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது.