பழங்குடியின மக்களுக்கு ரூ.50 கோடி செலவில் சொந்த வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அனைத்து பழங்குடியின மக்கள் சொந்த வீட்டில் குடியிருப்பதை உறுதி செய்ய வீடுகள் கட்டித் தருதல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, இணைப்பு சாலைகள் மற்றும் பாதைகள் இல்லாத இடங்களில் இணைப்பு சாலை, தெரு விளக்கு மற்றும் சூரிய மின் விளக்கு வசதி என அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் முதற்கட்டமாக ரூ.50 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தி தரப்படும்.

* நடப்பு கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எழுத்தூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட தொடக்க பள்ளியை நடுநிலை பள்ளியாகவும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பாச்சேரி, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரசவெளி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொக்காப்புரம் ஆகிய 3 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலை பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இன்னாடு அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாகவும் ரூ.6.43 கோடி மதிப்பீட்டில் நிலை உயர்த்தப்படும்.

* மதுரை மாவட்டம் கே.புளியங்குளம், கரூர் மாவட்டம் வாங்கல் குச்சிபாளையம், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் 82 கவுண்டம்பாளையம், திருநெல்வேலி மாவட்டம் ரெங்கசமுத்திரம் ஆகிய 5 கிராமங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய

5 சமுதாய கூடங்கள் தலா ரூ.1 கோடி செலவில் கட்டப்படும் என்றார்.