தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 3713 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78335ஆக அதிகரித்துள்ளது.  

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 3713 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78335ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படி, தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 34805 பரிசோதனைகள் செய்யப்பட்டது. இன்று அதிகபட்ச பரிசோதனைகள் செய்ததன் விளைவாக, பாதிப்பு எண்ணிக்கையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் அதிகபாட்சமாக 3713 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78335ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1939பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 51699ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2737 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 44094ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 56.28%பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 1025ஆக அதிகரித்துள்ளது.