சென்னையில் மகனின் நண்பனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் கைது

சென்யைில் மகனின் நண்பனான 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்ணை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

35 year old woman arrested under pocso act for child abuse in chennai

சென்னை அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யபிரியா (வயது 35). இவர் தனது மகன் தன்னை அடிக்கடி தாக்குவதாகக் கூறி மகனின் நண்பன் வீட்டில் கடந்த 2 மாதங்களாக தங்கி இருந்தார். அப்போது அங்கு வசித்து வந்த மகனின் நண்பனான 17 வயது சிறுவனுடன் சத்ய பிரியா நெருங்கி பழகி உள்ளார்.

பின்னர் சில மாதங்கள் கழித்து சத்ய பிரியா தனது வீட்டிற்கு செல்ல தயாரானார். அப்போது 17 வயது சிறுவனையும் தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளார். அதற்கு சிறுவனின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அதனை பொருட்படுத்தாத சத்யபிரியா சிறுவன் தன்னுடன் தான் வரவேண்டும் என்று அடம் பிடித்துள்ளார்.

பாஜகவின் பி டீம் நான் அல்ல; என்னுடைய மறு உருவம் தான் பாஜக - சீமான் விளாசல்

அப்போது சத்ய பிரியாவின் பேச்சில் மாற்றத்தை கண்ட சிறுவனின் பெற்றோர் சிறுவனிடம் விசாரித்தனர். அப்போது சத்ய பிரியா அவ்வபோது சிறுவனிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். தொடர்ந்து இதனையே வழக்கமாகக் கொண்ட சத்ய பிரியா தனது பாலியல் தேவைகளை தீர்த்துக் கொள்ளவே சிறுவனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளார்.

எம்எல்ஏ.வை பார்க்க சைக்கிளில் வந்தவர் சுருண்டு விழுந்து பலி; ஆம்புலன்ஸ் வராததால் நிகழ்ந்த சோகம்

இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சத்ய பிரியா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அப்பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios