சென்னையில் ஒரே நாளில் அதிரடி.. 33 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்.. காவல் ஆணையர் சங்கர் ஜிவால்..!
சென்னை மாநகர காவல்துறையில் நிர்வாக வசதிக்காக விருப்பத்தின் அடிப்படையிலும் பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் காவல் ஆய்வாளர்கள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், 32 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை மாநகர காவல்துறையில் 33 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை மாநகர காவல்துறையில் நிர்வாக வசதிக்காக விருப்பத்தின் அடிப்படையிலும் பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் காவல் ஆய்வாளர்கள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், 32 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தி.நகர் மதுவிலக்கு பிரிவில் இருந்த கண்ணன் ராயப்பேட்டை சட்டம்- ஒழுங்குக்கும், நீலாங்கரை குற்றப்பிரிவில் இருந்த கமலக்கண்ணன் தலைமை செயலக காலனி சட்டம் -ஒழுங்குக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜயகுமார் கோடம்பாக்கம் சட்டம் -ஒழுங்குக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இசக்கி பாண்டியன் எழும்பூர் குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அம்மு ஆதம்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஞானபிரகாசி நந்தம்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், புளியந்தோப்பு சட்டம் -ஒழுங்கில் இருந்த வேலு வேப்பேரி சட்டம் -ஒழுங்குக்கும்,
கொத்தவால்சாவடி குற்றப்பிரிவில் இருந்த செல்லப்பா பரங்கிமலை சட்டம்- ஒழுங்குக்கும், புளியந்தோப்பு குற்றப்பிரிவில் இருந்த ஜானகிராமன் புளியந்தோப்பு சட்டம்- ஒழுங்குக்கும், நுண்ணறிவுப் பிரிவில் இருந்த புஷ்பராஜ் யானைக்கவுனி சட்டம் -ஒழுங்குக்கும், அண்ணாநகர் சட்டம்- ஒழுங்கில் இருந்த ராஜேஷ்பாபு கோயம்பேடு குற்றப்பிரிவுக்கும், கோயம்பேடு குற்றப்பிரிவில் இருந்த கோபாலகுரு அண்ணாநகர் சட்டம் -ஒழுங்குக்கும், புழல் சட்டம்- ஒழுங்கில் இருந்த சீனிவாசன் மதுரவாயல் குற்றப்பிரிவுக்கும், மாதவரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் இருந்த சரவணபிரபு திருவொற்றியூர் சட்டம் -ஒழுங்குக்கும், மனநல காப்பக மருத்துவமனை-1ல் இருந்த வாசகி ஐஸ்அவுஸ் குற்றப்பிரிவுக்கும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை -1ல் இருந்த ராஜலட்சுமி சேத்துப்பட்டு குற்றப்பிரிவுக்கும், ஹாக்னி கேரியேஜியில் இருந்த மாலதி அரும்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், வண்ணாரப்பேட்டை சட்டம்- ஒழுங்கில் இருந்த பிராவின் டேனி மீன்பிடி துறைமுகம் சட்டம் -ஒழுங்குக்கும்,
எம்சிஆர் பிரிவில் இருந்த ஆரோக்கிய மேரி காத்திருப்போர் பட்டியலுக்கும், ஐயூசிஏடபிள்யூ பிரிவில் இருந்த அகிலா காத்திருப்போர் பட்டியலுக்கும், குமரன் நகர் குற்றப்பிரிவில் இருந்த பொன்ராஜ் குமரன் நகர் சட்டம் -ஒழுங்குக்கும், சாஸ்திரி நகர் குற்றப்பிரிவில் இருந்த ராஜாராம் சிந்தாதிரிப்பேட்டை சட்டம் -ஒழுங்குக்கும், பாதுகாப்பு பிரிவில் இருந்த ராஜ்பாபு நுண்ணறிவு பிரிவுக்கும், ஏழுகிணறு குற்றப்பிரிவில் இருந்த செந்தில் வடிவேலு நுண்ணறிவுப் பிரிவுக்கும், ராயபுரம் குற்றப்பிரிவில் இருந்த பூபாலன் சூளைமேடு சட்டம் -ஒழுங்குக்கும், சேத்துப்பட்டு சட்டம் -ஒழுங்கில் இருந்த புகழேந்தி நீலாங்கரை குற்றப்பிரிவுக்கும், பரங்கிமலை போக்குவரத்து புலானாய்வு பிரிவில் இருந்த பழனி தரமணி சட்டம் -ஒழுங்குக்கும்,
சூளைமேடு சட்டம் -ஒழுங்கில் இருந்த வெற்றிசெல்வன் சேத்துப்பட்டு சட்டம் -ஒழுங்குக்கும், புழல் குற்றப்பிரிவில் இருந்த சோபா ேதவி புழல் சட்டம் -ஒழுங்குக்கும், தரமணி சட்டம் -ஒழுங்கில் இருந்த ராமலிங்கம் சாஸ்திரி நகர் குற்றப்பிரிவுக்கும், பரங்கிமலையில் இருந்த ஜோகிம் ஜெர்ரி சிந்தாதிரிப்பேட்டை குற்றப்பிரிவுக்கும், கொருக்குபேட்டை குற்றப்பிரிவில் இருந்த தவமணி வண்ணாரப்பேட்டை சட்டம் -ஒழுங்குக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.